KOLNews

காங்கிரஸ்காரர்களுக்கு, காங்கிரஸ் வரலாறே தெரியவில்லை..! - சேம் சைட் 'கோல்' அடித்த திருச்சி வேலுச்சாமி..!

பொதுவாக பாரம்பரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்றவை, தங்கள் தொண்டர்கள் தங்கள் கட்சியின் வரலாறு குறித்து தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது நல்லது. அப்படி செய்யாமல் போனால் பொறுப்பான பதவிகளுக்கு வந்த பின், சில இடங்களில் உளறி கொட்டி அவமானப்பட வேண்டியதாகி விடும்,

அதிலும் குறிப்பாக, முன்பெல்லாம், உளறினாலும், தடாலடியாக,  'நான் அப்படி கூரவே இல்லை..!',  என சொல்லிவிடலாம், ஆனால் தற்போது அனைத்தும் காணொளியாக பதியப்படுவதால் சமாளிக்க முடியாது. குறிப்பாக அச்சில் ஏற்றப்பட்ட விஷயங்களும் அப்படியே..!

இந்த சூழலில், தற்போது தமிழக காங்கிரசில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனை காங்கிரஸ்காரரான  திருச்சி வேலுச்சாமியே வெளிப்படுத்தி, தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

ஆமாம்,கடந்த ஐவரி 3 ஆம் தேதி,இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் உறுப்பினர் திரு ஓமலூர் விசுவநாத முதலியார் அழகேசன் அவர்களின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுவதாக வெளியிடப்பட்ட வலைதள சுவரொட்டியில்,   ஓமலூர் விசுவநாத முதலியார் அழகேசனுக்கு பதிலாக, முன்னாள் பிரதமரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜனதா கட்சியைத் துவக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாயின் படத்தை தவறுதலாக வெளியிட்டுள்ளார்கள்.

இதை தன் முகநூல் பதிவிலி வெளியிட்டு, "மொரார்ஜிக்கும் அழகேசனுக்கும் வேறுபாடு தெரியல . இறைவா த நா. காங்கிரசை காப்பாற்று"  பதிவிட்டுள்ளார்  திருச்சி வேச்லுசாமி

English Summary

Congressmen do not know the history of the Congress ..! - Trichy Veluchamy who hit the same goal ..!

Latest Articles

KOLNews