KOLNews

எடியூரப்பாவை நீக்க சதி ! - ஆதரவு கரம் நீட்டுகிறார் சுப்பிரமணியன் சுவாமி

இந்திய அரசியலில் அவ்வப்போது கருத்து சொல்லி பலரின் கவனத்தை திருப்புபவர் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. சர்ச்சைகளை கிளப்பும் அவரது பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களும் உண்டு, அவருக்கென்ன, எதையாவது கிளரி விட்டு கொண்டிருப்பார் என கடந்து போவோரும் உண்டு. 

அந்த வகையில் , எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவை பா.ஜ.க ஆள முடியாது என கூறி தற்போது கர்நாடக அரசியல் களம் தன்னை பற்றி பேச வைத்துள்ளார்.

The Woke Journal | Stay woke | Page 8ஏற்கனவே, கர்நாடக மாநில முதலமைச்சர்  எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜக கட்சியில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷவர் மற்றும் எம் எல் ஏ , க்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் அதையடுத்து, எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்கி , புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் ,  சுப்பிரமணியன் சுவாமி , தனது கருத்தை தெரிவித்ததால் மூலம் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளர் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , கர்நாடகாவில் முதன்முதலில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தவர் எடியூரப்பா என்றும் , அவரை நீக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன்  அவர் இல்லாமல் கர்நாடகாவை பாஜக ஆள முடியாது என்றும் , பாஜகவுக்கு மீண்டும் அவர் வந்தபின் தான் வெற்றி பெற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

English Summary

Conspiracy to remove Yediyurappa! - Subramanian Swamy extends a hand of support

Latest Articles

KOLNews