KOLNews

கொரோனா..ஊரடங்கு..12ஆம் வகுப்பு தேர்வு..நீட் தேர்வு..! - தடுமாறுகிறதா தமிழக அரசு..?

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதவியேற்றுள்ள திமுக அரசு, கடந்த 4 வாரங்களில், பலரின் பாராட்டை பெரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. கடுமையான கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், பிரதான சிக்கலாகவும், பிற சிக்கல்களுக்கு தாயாகவும் கொரோனா தொற்றே இருந்து வருகிறது. ஆகவே தொற்று எண்ணிக்கையை குறைக்கவும், உயிர்பலியை தவிர்க்கவும், புதிய அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள், இது நாள் வரை திமுகவை விமர்சித்தவர்களையே பாராட்ட வைத்தது.

இப்பொது எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கிறது என நம்பிக்கை துளிர்த்த நிலையில்,  12ஆம் வகுப்பு தேர்வை நடத்தும் விஷயத்திலும், ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததிலும் தமிழக அரசு சற்று தடுமாறுவதாக தெரிகிறது. 

12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திப்போடலாமே தவிர, அதை ரத்து செய்வது சரியாக இருக்காது. மாணவர்களின் மேற்படிப்பிற்கும், வேலைவாய்ப்புகளும் 12ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியம் என்பதால், தேர்வு  கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தது., பள்ளி கல்வி துறை அமைச்சர்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பிரிதிநிதிகளுடன் நடத்திய  ஆலோசனைக்கு பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைய தான் தொடர்ந்து வந்தது. அதற்கு பின் அணைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் உட்பட சில கட்சிகள் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரின. 

அதன் பின் நேற்று மாலை 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையப்பாடு மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, மருத்துவதுறை நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்கபட்டதை குறிப்பிடுகிறார்கள். 

உயிர் முக்கியம் என்பது அரசின் கருத்தாக இருக்கும் பட்சத்தில், அதே மருத்துவத்துறை, இன்னும் ஒரிரு  வாரங்கள் ஊரடங்கை தொடர்வதே கொரோன தொற்றை குறைக்க உதவும் என பரிந்துரைக்கப்பட்டதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழும்புகிறது  

12ஆம் வகுப்பு தேர்வு என்பதும், ஊரடங்கு என்பதும் கொரோனா என்கிற ஒன்றால் வந்த சிக்கல் தான், ஆனால் தீர்வுகள் மட்டும் தேர்வுக்கு ஒரு மாதிரியாகவும், ஊரடங்கிற்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. 

இதற்கிடையே, நீட் தேர்விலிருந்து விலக்கை பெறுவதை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த திமுக, அதற்கு ஏதுவாக 12ஆம் வகுப்பு தேர்வு விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதோ..!, என எண்ண தோன்றுகிறது.

 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது,  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் கோரிக்கைக்கு வலு சேர்கிறதோ இல்லையோ, 12ஆம் வகுப்பு தேர்வையே நடத்தினீர்களே..நீட் தேர்வை ரத்து செய்ய மட்டும் கொரோனாவை காரணமாக காட்டுவதா..? என கேள்வி எழுப்பப்படும் நிலையை தவிர்ப்பதற்காக இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கோமோ..? என்கிற கேள்வியும் எழுகிறது. 

ஆக, தற்போது 12ஆம் தேர்வை தீர்மானிப்பதில் கொரோனாவுடன், நீட் தேர்வு எதிர்ப்பும் ஒரு காரணியாக மாறி உள்ளதாக  தெரிகிறது. இதன் மூலம் மாணவர் நலன் என தமிழக அரசு காட்டிய முனைப்பு, அரசியல் சூழல்களுக்கு ஆட்பட்டு தடுமாறுகிறதோ ..? என்னும் சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. 

English Summary

Corona..Lockdown..12th class exam..Neet exam ..! - Is the Tamil Nadu government stumbling?

Latest Articles

KOLNews