KOLNews

பதவி இறக்கம்..அல்லது நீக்கம்..! - அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் நிதின் கட்கரி

அரசு துறை வேலை என்றால் பணிபாதுகாப்பு இருக்கும் என்பதாலேயே அரசுவேலை மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் காலம் இப்படியே போகாது என்பதை உணர்த்துவது போல்  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் நேற்றைய பேச்சு அமைந்துள்ளது  

ஆமாம்,  ''தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் விரைந்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் பணியில் இருந்து விரட்டப்படுவர்'' என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் கட்கரி 16 மாநிலங்களில் 740 திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 28 ஆயிரத்து 304 கி.மீ. நெடுஞ்சாலை பணிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின் அவர் கூறியதாவது:

"ஏற்கனவே பல முறை எச்சரித்தும் அதிகாரிகள் நெடுஞ்சாலை திட்ட ஒப்பந்ததாரர்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். குறிப்பாக 50 கோடி ரூபாய் வரையிலான சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர்கள் பிராந்திய அதிகாரிகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் முடிவெடுக்க அஞ்சுகின்றனர். அதனால் திட்டம் தொடர்பான ஏராளமான விசாரணைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில்,அதிகாரிகள் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் திட்டப் பணிகள் துவங்குவது தாமதமாகிறது. அதனால் இம்முறை நான் ஒரு முடிவு செய்து விட்டேன்.திட்டங்களை தாமதப்படுத்தும் இயக்குனர்கள் பிராந்திய அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுவர் அல்லது நீக்கப்படுவர்" என திட்டவட்டமாக தெரிவித்தார் கட்கரி .

English Summary

Degrade or Removal ..! - Minister Nitin Gadkari who warned officials

Latest Articles

KOLNews