KOLNews

டெல்லி தேர்தல்..மினி இந்திய தேர்தல்..! - வாயை கொடுத்து 'கலாய்' வாங்கும் ப.சிதம்பரம்

அண்மையில் நடந்த தில்லி தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மீ பெரும் வெற்றி பெற்ற நிலையில் , காங்கிரஸ் முக்கிய தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது - 

தில்லி வாக்களித்திருக்கிறது என்றால் லட்சக்கணக்கான மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், பெங்காலிகள், குஜராத்தியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் வாக்களித்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வந்துள்ள மாநிலங்களின் உணர்வை பிரதிபலிக்கிறார் என்று கொண்டால்,  ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை தில்லி தேர்தல் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

ஒரு மாநிலத் தேர்தல் என்பதை விட தில்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்று கொள்ளலாம். 

என அவர் பதிவிட்டுள்ளார்.

ப. சிதம்பரத்தின் இந்த கருத்தின் படி, பாஜகவே அடுத்த தேர்தலில் நாடெங்கும் தோல்வியை தழுவும்  என்றால் , பூஜ்ய இடத்தை பெற்றுள்ள காங்கிரசின் கதி என்ன..? என்று ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் எதிர்தரப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

English Summary

Delhi Election .. - Chidambaram to buy 'Kalai' by mouth

Latest Articles

KOLNews