KOLNews

உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விவரம் ..!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அளித்த தகவல்களின் படி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் .  பிப்ரவரி 10-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் . பிப்ரவரி 14-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 20 தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 23-ம் தேதி 4-ம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 27-ம் தேதி 5-ம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3-ம் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7-ம் தேதியன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும்.

அதே போல மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.  உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும். 

இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

அத்துடன், தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்.

English Summary

Details of 5 state election dates including UP ..!

Latest Articles

KOLNews