KOLNews

கோவையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை - டிடிவி தினகரன் கண்டனம்

கோவை வெள்ளலூரில், அமைந்துள்ள பெரியாரின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை சாதகமாகிக்கொண்டு சிலர் இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் .டிடிவி தினகரன், கோவையில் தந்தை பெரியார் திருவுருவச் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதற்கு,  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கோவை வெள்ளலூரில், தந்தை பெரியாரின் திருவுருவச்சிலை அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதற்கு காரணமான சமூக விரோத சக்திகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் தொடராமல் தடுக்கமுடியும்,  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Disrespect to Periyar statue in Coimbatore - TTV Dhinakaran condemned

Latest Articles

KOLNews