KOLNews

உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறார்கள்..! - பாஜக மீது சோனியா குற்றச்சாட்டு..!

நேற்று தில்லியில் எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததாவது -

தேசத்தில் இதுவரை இல்லாத அளவில் குழப்பம் நிலவுகிறது. மத்தியில் ஆளும் அரசு, மக்கள் மத்தியில் துவேஷ உணர்வினை பரப்பி வருகிறது. மேலும், மத அடிப்படையில் மக்களை பிரிப்பதற்கு அரசு முயன்று வருகிறது.

சமீபத்தில், தில்லி ஜாமியா பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அலாகாபாத் பல்கலைக்கழகம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைப் பாா்த்தோம். அதைத் தொடா்ந்து, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜக திட்டமிட்டு நடத்திய தாக்குதலை தேசம் முழுவதும் அதிா்ச்சியுடன் பாா்த்தது.

தேசம் முழுவதும் சிஏஏ, என்ஆா்சி ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவுடன் தன்னெழுச்சியாக இளைஞா்களால் நடத்தப்படும் போராட்டங்கள், மத்திய அரசு மீதான அதிருப்தியையே வெளிப்படுத்துகின்றன.

Image result for modi and amit shah

மேலும், என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து பிரதமா் மோடியும், மத்திய அமைச்சா் அமித் ஷாவும் மக்களை தவறாக வழிநடத்துகிறாா்கள். இந்த குறித்து அவா்கள் இருவரும் முரண்பட்ட  கருத்துகளைத் தெரிவிக்கிறாா்கள். மொத்தத்தில், நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட உண்மையான பிரச்னைகளில் இருந்து அவா்கள் திசை திருப்பி வருகின்றனா்", 

என்றாா் சோனியா காந்தி.

Image result for rahul gandhi

அதன் பின் பேசிய ராகுல் காந்தி , ‘போராட்டங்கள் நடைபெற்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்கு பிரதமா் மோடி செல்ல வேண்டும். அங்கு நாட்டுக்காக அவா் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை மாணவா்கள் மத்தியில் பேச வேண்டும். இதை பிரதமா் செய்வாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.

English Summary

Distracted from the real problems ..! Sonia's allegation against BJP

Latest Articles

KOLNews