KOLNews

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக தான் உள்ளது .! - கே.எஸ். அழகிரி சமாளிஃபிகேஷன்..!

நேற்று காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்ததின்  மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதோ..! என நினைக்கும் அளவில் சென்ற அரசியல் களம், இன்று மீண்டும் 'யூ-டர்ன்'  அடித்துள்ளது. 

முன்னதாக, அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட அதிருப்தி, அதன் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மூலம் வெளிப்பட்டது.

'கூட்டணி தர்மத்திற்கு முரணானது' என திமுகவின் மீது அவர் விமர்சனத்தை முன்வைக்க, அது திமுக தலைவர் ஸ்டாலின் மீதான நேரடி தாக்குதல் என கோபம் கொண்டது திமுக, அதையடுத்து காங்கிரஸ் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்தது.

இது அரசியலில் பரபரப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், இன்று,புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசிய கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள்தான். இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி உடையாது. கூட்டணி வலுவாகவே உள்ளது என்று பதிலளித்தார்.

அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியிருக்கும் பிரச்சனை குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், 'திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை. நானும் ஸ்டாலினும் இணைந்த கரங்கள். எங்களுக்குள் சலசலப்பே இல்லை என்பதே எனது கருத்து. உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கருத்தை மட்டுமே நான் தெரிவித்தேன்', என்று கே.எஸ். அழகிரி கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் மனக்கசப்பு உண்டானது கே.எஸ்.அழகிரி மூலமாகவே வெட்டவெளிச்சமாகிய நிலையில், தற்போது அவரே 'நானும் ஸ்டாலினும் இணைந்த கரங்கள்' என கூறுவது காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இவருக்கு சாதகமான 'சிக்னல்' கிடைக்கவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

English Summary

DMK - Congress alliance is strong.! - K.S. Alagiri adjustment..!

Latest Articles

KOLNews