KOLNews

நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் திமுக..! - போட்டு தாக்கும் முதல்வர்..!

'நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் திமுக' என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்து அறிக்கை விடுத்திருந்தற்கு நிலையில், முதல்வர் அதற்கு பதில் அளித்துள்ளார்.

முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர், கேள்வி கேட்ட திமுகவை நோக்கி எதிர் கேள்விகளை முன்வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

திமுக  ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? அவர் பேசுவது முழுவதும் பொய்யான செய்தி. கடந்த 5 ஆண்டுகாலத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

Image result for mk stalin

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். பெரிய தொழில் தொடங்க 5 அல்லது 6 ஆண்டு காலம் தேவைப்படும். சிறிய தொழில் தொடங்க 2 அல்லது 3 ஆண்டு காலம் ஆகும்.ஆகவே, அவரது நோக்கமே எங்களை குறை சொல்வதுதான் .

தற்போது சென்று வந்த இந்த வெளிநாட்டுப் பயணத்தின் பலனாக , தமிழகத்தில் 8,835 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

ஸ்டாலின், இஸ்ரேல் செல்வதைக் குறித்து உபரி நீரை சேமிக்க முடியவில்லை, இஸ்ரேல் செல்கிறாராம் என்று கிண்டல் செய்து செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய தந்தை கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அவர்கள் எத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ளார்கள்?

வளர்ச்சி குறித்து அறிய வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் திமுக" என்றார் முதல்வர்.

English Summary

DMK is the party that does not care about the country ..! - CM

Latest Articles

KOLNews