KOLNews

தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்தது திமுக..!

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிப்ரவரி இறுதியிலோ  ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. . 

இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக,  திமுக, தனது  தேர்தல் அறிக்கையை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் , 

2021 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் அறிக்கையை தயாரிக்க கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி, ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.. 

இக்குழுவானது, அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று திமுகவினர் திமுக ஆதரவாளர்கள்,மட்டுமல்லாமல்  பொதுமக்கள்,   வணிகர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர், விவசாயிகள் சங்கத்தினர், நெசவாளர்கள், தொழிலதிபர்கள், குறு சிறு நடுத்தர தொழில் துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அமைப்பினர் என்று பல்வேறு துறையினரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. 

English Summary

DMK set up committee to prepare election manifesto ..!

Latest Articles

KOLNews