KOLNews

ஆயத்தமாகிறது .'டிஎன்ஏ' தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா..!

தனி ஒரு மனிதரின் அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவும் டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நேற்று மக்களவைச் செயலாளர் பிறப்பித்தார்.

குற்றச்செயல் செய்பவர்கள் , குற்றங்கள், விபத்துகளால் மரணமடைந்தவர்கள், சந்தேகத்துக்கு உரியவர்கள், விசாரணையில் இருப்போர் ஆகியோரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க டீயாக்ஸிரைபானுக்லியக்ன் என்கிற இந்த அமிலம் பயன்படுவதாக இது குறித்து டிஎன்ஏ மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for dna technology regulation bill 2019

சென்ற ஜூலை மாதம் இந்த டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது , அதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றச்சூழல் மற்றும் வனம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்

இந்நிலையில்  நேற்று இது குறித்து மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,

"மக்களவைத் தலைவருடன் , மாநிலங்களவைத் தலைவர் இணைந்து நடத்திய ஆலோசனையை அடுத்து இந்த டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு இந்த மசோதாவை ஆய்வு செய்து, மக்களிடம் கருத்துக் கேட்டு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 மேலும், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு குழுவில் ஆலோசனை நடத்தி, அறிக்கையாக அளிப்பார்.

 ஜெய்ராம் ரமேஷ்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றச்சூழல் மற்றும் வனம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

English Summary

DNA 'technical regulatory bill ..!

Latest Articles

KOLNews