KOLNews

சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதா..? - மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் ..!

கடந்த மாதம் 19 - ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவடைந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே , அவையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்ததும் தெரிந்ததே ..

இந்நிலையில் , நேற்று, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை, காங்கிரஸ் , திமுக , தேசியவாத காங்கிரஸ் , சிவசேனை , சமாஜவாதி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , கேரளா காங்கிரஸ் ( எம் ) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் . 

இது தொடர்பாக, போராட்டத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி , ' நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்துவிட்டது . ஆனால் , நாட்டிலுள்ள சுமார் 60 சதவீத மக்களின் நலனுக்காகக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை . நாடாளுமன்றத்துக்குள் பேசுவதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை . இதன் மூலமாக மத்திய அரசு மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளது.. மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தாக்கப்பட்டுள்ளனர் . நாட்டை மொத்தமாக விற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருகிறார் ' என்றார் . 

இந்த போராட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி , பகுஜன் சமாஜ் ஆகியவை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

அதன் பின் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் , பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை .  அக்கோரிக்கையை மாநிலங்களவையில் எழுப்பிய பெண் எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் .சர்வாதிகாரப் போக்கு : நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியைச் சேராத வெளி நபர்களைக் கொண்டுவந்து மத்திய அரசு அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளது .  எனவே , மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . 

அதிகன் பின், எம்.பி.க்களிடம் அவைப் பாதுகாவலர்கள் முவைறி நடந்து கொண்டது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். 

 

 

English Summary

Do you want to continue with the dictatorial trend ..? - Opposition parties protest against the central government ..!

Latest Articles

KOLNews