KOLNews

மருத்துவர்கள் எச்சரித்தது உண்மை ..! - யோசிக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், அது குறித்து ஒரு விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த.

முன்னதாக, ' தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதால்  தனது  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். என்றும் அதனால்  கொரோனா தொற்று தன்னை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் என்பதால் அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், தான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்த கொரோனா பிரச்சினை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்த காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள மக்கள் த ன்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை  ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ' ரஜினி தெரிவிப்பதாக ஒரு பதிவு சமூக வலை தளங்களில் வலம் வந்தது.

இந்நிலையில்,  அந்த  அறிக்கை அவரது இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ள  தன்  உடல் நிலை மற்றும் தனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், 

இது குறித்து தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்க உள்ளதாகவும், தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். 

English Summary

Doctors' warning is true ..! - Thinking Rajinikanth

Latest Articles

KOLNews