KOLNews

தமிழருவி மணியன் பேசியதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்..! - ராமதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அதன்பின்னர் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பதில் கூறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அண்மையில், நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும்,  காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் வருகிற ஏப்ரல் மாதம் நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவார் எனவும் அவரது தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமதாஸ், ரஜினியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தமிழருவி மணியன் கூறியதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை, என்றும்,  ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைப்பதாக அவர் தெரிவித்தார். 

மேலும், மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயம் அல்ல என்பது தவறானது. அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அவசியம்' என்றும் தெரிவித்தார்.

English Summary

Don't give importance to Tamizharuvi Maniyan's speech ..! - Ramadas

Latest Articles

KOLNews