KOLNews

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்காதீர்கள் ..! - விஜய் சேதுபதிக்கு வன்னியரசு வலியுறுத்தல்..!

விளையாட்டு  வீரர், வீராங்கனைகளின்  நிஜ வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு வரும் திரைப்படங்கள்  வெற்றிபெறும் நிலையில்,  கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அளவில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக அறிவிப்பு ஒன்று வெளியானது.

இந்த படத்தை எம். எஸ். ஸ்ரீபதி இயக்க தார் மோஷன்  பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த படத்தில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடிப்பதை தவிர்க்குமாறு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழும்புகின்றன.

Image result for vijai sethupathi as muthiya muralidaranஇதில்  குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு விஜய்சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 

“நாம் விஜய் சேதுபதியை எதிர்க்கவில்லை. அவர் நல்ல கலைஞர், அவர் சம்பாதிப்பதை கல்வி உதவி தேவை படுகிறவர்களுக்கு உதவி செய்கிறார். அவர் மீது இந்த சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. இப்படியாக தமிழ் சமூகத்தில் மதிக்கக்கூடிய கலைஞராக இருக்கக்கும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது அவருடைய மதிப்பை சமூத்தில் குறைக்கும் என்கிற இடத்தில் இருந்து இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ஏனென்றால் முத்தையா முரளிதரனை ஒரு தமிழராக காட்டி அறிமுகப்படுத்துகிறீர்கள், அப்படிதான் இந்த படத்தை விளம்பரப்படத்துவார்கள் ஆனால் முத்தையா முரளிதரன் கடந்த காலங்களில் தமிழர் என்கிற அடையாளத்தில் இருந்தாரா?

2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன், அவர் நான் தமிழன் இல்லை என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பல இடங்களில் தான் ஒரு தமிழர் இல்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார். கேமரூன் இலங்கையில் இருந்து வந்த போது தங்கள் சொந்தங்களை இழந்த தமிழ் மக்கள் அவரிடம் முறையிட்டார்கள். அது தொடர்பாக நான் அரசிடம் பேசுகிறேன் என்று அவர் கூறிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் கேமரூனிடம் இல்லாததை சொல்லி தவறாக முறையிடுகிறார்கள் மக்கள் என்று ஒரு பதிவு போடுகிறார். அப்போது எம்.பி.யாக இருந்த மனோ கனேசன் கடுமையாக கண்டித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இலங்கை போரில் 1,5 லட்சம் தமிழர்கள் கொல்ல பட்டு போர் முடிவுக்கு வந்தபோது அமைதியை நிலை நிறுத்தியவர் ராஜபக்சே என்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் முத்தையா முரளிதரன். இந்த இரண்டு விஷயங்கள் போதும் நாம் வேண்டாம் என்று கூறுவதற்கு. இதை அடுத்து போருக்கு பின் “தங்களை” என்கிற சிங்கள கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். இப்படியாக அவர் தொடர்ந்து சிங்களர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்.  

இவர்கள் படம் எடுப்பதற்கு காரணம் என்னவென்றால், உலக அரங்கில் இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று பேசிக்கொண்டிருக்கும் வேலையில், இனப்படுகொலை நடைபெற்றிருக்கிறது என்று சொல்லும் நாட்டில் இருந்துதான் இப்படி ஒரு தமிழன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று  தமிழினப்படுகொலையை வளரும் இளஞர்கள் மத்தியிலும் எதிர்கால தலைமுறைகளிடையே மறைப்பதற்கான முயற்சிதான் இந்த படம்.

அதை விஜய்சேதுபதி போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள நடிகரை கருவியாக்க நினைக்கிறார்கள். அதற்கு விஜய்சேதுபதி துணை போகக்கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து. இந்த படத்தின் இயக்குநர் ஒரு தொழில் முறை கலைஞராக இருக்கலாம். அவரை இம்மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சிலர் அனுகி இருக்கலாம் அதைப்பற்றி தெரியாமல் நான் சொல்ல முடியாது ஆனால் அவர்களது நோக்கம் இதுதான்.

இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே, சர்வதேச அரங்கில் விசாரனை வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்ற நேரத்தில் அதை இல்லை என்று உடைப்பதற்கான முயற்சியாகத்தான் இந்த படத்தை பார்க்கிறோம்.

முத்தையா முரளிதரன் வெறும் விளையாட்டு வீரராக மட்டும் இருந்திருந்தால் நாம் எந்த இடத்திலும் கேள்வி எழுப்பப்போவதில்லை. ஆனால் அரசியல் தளத்தில் அவர் பல்வேறு கருத்துகளை கூறியிருப்பதால் இந்த கேள்வி நமக்கு எழுகிறது. 

விஜய்சேதுபதி என்பவர் எளிதாக அனுகக்கூடியர், அவருடைய நிறம் வயது இந்த படத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு குழுவின் உள்நோக்கம் என்பது தமிழ்நாட்டில் இலங்கை மீதான அதிர்ப்தியை உடைக்க வேண்டும் என்கிற முயற்சிதான். ஏனென்றால் கிரிகெட்டை வைத்து ஒரு போலி தேச பக்தி உருவாக்குகிறார்கள். இந்தியா இலங்கைக்கு எதிரான கிரிகெட் போட்யாக இருக்கட்டும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாக இருக்கட்டும் இதை வைத்து ஒரு போலி தேச பக்தியை உருவாக்கும் முயற்சி இது.", 

என்றார் வன்னியரசு.

 

 

 

English Summary

Don't play the role of Muthiah Muralitharan ..! - Vijay Sethupathi insists by vanniyarasu..!

Latest Articles

KOLNews