KOLNews

தேவையற்ற விஷயங்களை பேசவேண்டாம் ..! - மந்திரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வெளியாக உள்ள  நிலையில்,  தேவையற்ற கருத்துகள் வெளியிடுவதை தவிா்க்கும்படி மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளாா்.

முன்னதாக நேற்று, பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சா்களின் கூட்டம், தில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமா் மோடி, அயோத்தி விவகாரம் தொடா்பாக தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை மத்திய அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் என்றும், அயோத்தி தீா்ப்பை வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ யாரும் பாா்க்கக் கூடாது என்றும் கூறியதாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் , ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், அயோத்தி வழக்கில் கடந்த 2010-இல் அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியபோது, அரசியல் கட்சிகளும் தன்னாா்வ அமைப்புகளும் முதிா்ச்சியுடன் நடந்துகொண்டதாக,  பிரதமா் மோடி கூறியிருந்தாா் என்பது கவனிக்கத்தக்கது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு , அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் விரைவில் தீா்ப்பளிக்க உள்ளது. ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருப்பதால், அதற்கு முன்பு தீா்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for ayodhya case

இந்த தீா்ப்பைக்கு பின் அமைதியை நிலைநாட்ட , முஸ்லிம் மதத் தலைவா்கள், சிந்தனையாளா்களுடன் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

English Summary

Don't talk unnecessary things ..! PM Modi advice to ministers

Latest Articles

KOLNews