KOLNews

அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியலையா ? - துளைத்தெடுக்கும் துரைமுருகன்..!

சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'குடும்ப அரசியல்' என திமுகவை நாசூக்காக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலடி தந்ததுடன், அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக பாஜக- அதிமுக கூட்டணியை விமர்சித்துள்ளார்.

முன்னதாக வேலூரில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளரிடம் பேசுகையில் தெரிவித்ததாவது - 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசியது,அரசு விழாவில் கலந்து கொண்டது குறித்து திமுகவுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி எதிர்கட்சியினரை வசைவாடி சென்றுள்ளார் இது ஜனநாயக நெறி முறையை அழிக்கும் செயலாகும். அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் ஜனநாயகம் அழிந்து  சர்வாதிகாரம் தான் தலைதூக்கும். பழைய நெறிமுறைகளை மாற்றிவிட்டு, மத்திய மாநில அரசுகள் அவ்வாறு நடப்பதை  திமுக பொதுச் செயலர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகம் சிறந்து விளங்குவதாக அமித்ஷா கூறியுள்ளார். அவர்  கருத்தை எண்ணி தமிழக மக்கள் சிரிக்கிறார்கள். தமிழகத்திலேயே இப்படி என்றால் , மற்ற மாநிலங்களை எப்படி இருக்கும் என கேள்வியும் எழுகிறது. தமிழகம் பல்வேறு புயல்களை எதிர்கொண்ட போது ஆளும் பாஜகவின் மத்திய அரசு என்ன உதவிகளை செய்தது என்பதை முதலில்  பட்டியலிடுங்கள். அதற்குப்பின் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி செய்த விஷயங்களை பட்டியலிடலாம். 

கருணாநிதி இல்லை, அவர் மகன் தானே இருக்கிறார் என நினைக்கிறார்கள். ராஜராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் கடாரம் வரை வென்றார் அதேபோல் கருணாநிதியை விட 8 மடங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா பேசும் போது எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை என்பதை சிந்திக்க வேண்டும். இத்தகைய பேச்சை அமித்ஷா பீகாரில் பேச வேண்டும். மேலும் வாரிசு அரசியலாக ஒபிஎஸ். ஜெயக்குமார் ஆகியோர் மகன்கள் இல்லையா ? என்பதைக் கூறவேண்டும்"  

English Summary

Don't you know the difference between government and politics? - Durai murugan..!

Latest Articles

KOLNews