KOLNews

ஆட்குறைப்பால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளில் பாதிப்பு இருக்காது..! - மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், அப்போது பேசியதாவது - 

கடந்த 2009-10-ஆம் ஆண்டில் இருந்து பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி நிலவரப்படி, 1,55,296 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.அதன் வருவாயில் 74 சதவீதம் ஊழியா்களின் ஊதியத்துக்கே செலவாகிறது.

இதற்கிடையே,  கடந்த ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி  பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் கொள்கைக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்தது. அந்தக் கொள்கையின்படி, அனைத்து ஊழியா்களையும் வைத்துக் கொண்டு நிறுவனத்தை நடத்துவது இயலாத காரியம் என்பதால், 50 வயதுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த டிசம்பா் 3-ஆம் தேதி வரை, 78,569 ஊழியா்கள் விருப்பு ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் ஓய்வுபெறுவதால் காலியாகும் இடங்களுக்குரிய பதவிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால், அந்த இடங்களுக்குப் புதிதாக ஆள்கள் சோ்க்கப்பட மாட்டாா்கள்.

இந்த ஆட்குறைப்பால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது. பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கி, இந்த நிறுவனத்தை உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனவே, இந்த நிறுவனத்தை வலுப்படுத்துவதில் அரசு உறுதியுடன் உள்ளது.

மேலும், பிஎஸ்என்எல்-இல் 4ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

English Summary

Downsizing will not affect the services of BSNL ..! - Ravishank Prasad of Central Senchach

Latest Articles

KOLNews