KOLNews

விவசாயிகள் போராட்டம் எதிரொலி..! - டெல்லியில் சில ரயில்கள் ரத்து..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் வலுத்து வருகிறது.

 முன்னதாக டெல்லியில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளை தற்காலிகமாக பயன்படுத்த ஆளும் 'ஆம் ஆத்மீ' அரசிடம் போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் டெல்லி அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வடக்கு ரயில்வே, 2 விரைவு ரயில்கள் ரத்து செய்துள்ளது. 5 ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் ரயில் பேருந்து வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

அத்துடன், போராட்டம் தொடர்வதையடுத்து டெல்லி போலீசார் உட்பட பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இதற்கிடையே, போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய கிசான் சங்கம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிரண்குமார்,  "தடியடி, கண்ணீர்புகை குண்டு, கம்பிவேலி கடுப்பு, போன்ற அனைத்தையும் தாண்டி வந்துள்ளோம். புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் அதுவரை டெல்லியில் முகாமிட்டு இருப்போம்" என உறுதியாக தெரிவித்துள்ளார்.

English Summary

Echo of farmers' struggle ..! - Some trains canceled in Delhi ..!

Latest Articles

KOLNews