மாநிலத் தோ்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி வெளியிடப்பட்டது.
முன்னதாக,இன்று (டிச. 2) காலை 10 மணியளவில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.
அதே போல, வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும்.
தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார்.
நிர்வாக காரணங்களை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அவை பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி தகவல் தெரிவித்தார்.
English Summary
Election date for Tamil Nadu local administration