KOLNews

முடிந்தது..11 எம்எல்ஏக்கள் வழக்கு..! - நிம்மதி பெருமூச்சு விடும் அதிமுக

புது தில்லி: 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கில், தமிழக சபாநாயகர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் கடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தார். அவர் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவா் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து சட்டப் பேரவைச் செயலா் பதில் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான நீதிபதிகள் சூா்யகாந்த், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கி அமா்வு முன்பு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர்  நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

விளக்கத்திற்கு பின் நீதிபதிகள் , இந்த விவகாரத்தில் சபாநாயகரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது, இந்த விஷயத்தில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என தங்களது உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைப்பதாகக் தெரிவித்தனர்.

அத்துடன் , சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்றும், கால அவகாசம்  பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த வகையில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது, இன்றைய படஜெட் உரையை கேட்டுக்கொண்டிருந்த ஆதிமுகவினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

English Summary

Ended..11 MLAs Case ..! - ADMK in relief

Latest Articles

KOLNews