KOLNews

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திப்பு விவகாரம் ..! - சும்மா.. ஊதி பெரிதாக்குகிறார்கள்.! என்கிறார் ஜெயக்குமார்

நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்ததாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், புதிய வீட்டுக்கு கிரக பிரவேஷம் செய்வதால் ஓ.பி.எஸ் . பங்கேற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்தார் . 

இந்நிலையில் , இன்று எழும்பூரிலுள்ள நட்சத்திர விடுதியில் இ.பி.எஸ் . - ஓ.பி.எஸ் . சந்தித்து பேசினர் . சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற  ஆலோசனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

இருப்பினும், அரசியலுக்கு மீண்டும் வருவது போல் சசிகலா பேசும் ஆடியோ விவகாரத்தை தொடர்புபடுத்தி அரசியல் பல்வேறு யுகங்கள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் இதனை மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், ஒபிஸ் மற்றும்  இபிஸ் இடையே எந்த கருத்து வேறுபாடு இல்லையெனவும், ஊடகங்கள் தான் இதை ஊதி பெரிதாக்குவதாக தெரிவித்துள்ளார்.

English Summary

EPS - OPS meeting issue ..! - Just .. blowing magnification.! Says Jayakumar

Latest Articles

KOLNews