KOLNews

விபச்சாரம் கூட இரு தனி மனிதர் சம்பந்தப்பட்டது தான்..! - சீமானுக்கு திருச்சி வேலுச்சாமியின் நெத்தியடி பதில்.

அண்மையில் தமிழக பாஜகவில் துணை தலைவராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே ..

அதனைத்தொடர்ந்து அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது கடும் விமர்சனத்தை முன்னெடுத்த நிலையில், ஜோதிமனையின் விமர்சனம் குறித்து பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயத்தை கையிலெடுத்து அரசியல் செய்வது சரியல்ல, என்பதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

BJP hits out at DMK for politicising agri bills, to launch counter-campaign  soon - The Hindu BusinessLine

அதையடுத்து, அவரின் முழு பேச்சையும் கருத்தில் கொள்ளாமல், ராகவனின் செயலுக்கு ஆதரவாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டார் சீமான். 

இந்நிலையில், சீமானின், ராகவன் விவகாரம் குறித்த கருத்துக்கு, ஒரு தனியார் ஊடகத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக திருச்சி வேலுச்சாமி, கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். 

Lawsuit Against Naam Tamilar Katchi Seeman in Vikravandi by TN Congress  K.S. Alagiriஅதில் அவர் தெரிவித்திருப்பதன் சாராம்சம் - 

"சீமானின் ஒரு கருத்துடன் நான் உடன்படுகிறேன், அதாவது, ராகவனின் காணொளி பிரச்சனையை தவிர பேசவேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க, இது தொடர்பான அரசியலையே  முன்னெடுப்பது தவறு என்பதில் நான் 200 சதம் உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இது தனி மனித விவகாரம் என புறம்தள்ளுவது சரியல்ல. விபச்சாரம் கூட இரு தனி மனிதர்கள் சம்பந்தப்பட்டது தான், அதற்காக யாரும் புகார் அளித்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா..? 

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். ஒழுக்கத்தை கையிலெடுக்க வேண்டும்", என தெரிவித்துள்ளார்.

English Summary

Even prostitution involves two separate people ..! - Trichy Veluchamy's strong reply to Seeman.

Latest Articles

KOLNews