KOLNews

நீட் தேர்விலிருந்து விலக்கு ! - மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

நேற்று, நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் என்கிற மாணவன் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார் .

 10 ஆண்டு இடைவெளிக்கு பின்,  புதிதாக பதவியேற்ற திமுக, ,ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து  நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை பெற்றது. இந்நிலையில் இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது .  

மசோதாவை தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின், நீட் நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது என்றும்,  12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் . 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாகினர் . பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தினால் கல்வித் தரம் குறையாது . அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதவீதம் ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

English Summary

Exempt from NEET exam! - Chief Minister Stalin introduced the bill

Latest Articles

KOLNews