திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் திமுகவின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அங்கு பேசியதன் சாராம்சம் -
இதை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MKS), ‘ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய நடுத்தர குடும்பத்தில் பிறந்திருக்க கூடிய மாணவர்கள் படித்து அதற்கு பிறகு மருத்துவராக வரமுடியாத சூழ்நிலையை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் உருவாக்கி வைத்துள்ளது. இதனால் இதுவரை 15 பேர் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர்.
இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நான் ஒரு உறுதியைக் கொடுக்கிறேன். நாங்கள் வந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாத ஒரு நிலையை உருவாக்குவோம்.
அதே போல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். சிறு விவசாயி, பெருவிவசாயி பாகுபாடின்றி ரத்து செய்யப்படும். விவசாயிகள் வறுமை காரணமாக தங்க நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள், 5 பவுன் வரை கடன் வைத்துள்ளவர்கள் அத்தனை கடனையும் ரத்து செய்வோம்.
English Summary
Exemption for extension, cancellation of agricultural loans ..! - Stalin on the hunt ..!