KOLNews

வங்கி கடனை திரும்ப செலுத்த கூடுதல் கால அவகாசம்..! - தீவீர யோசனையில் மத்திய அரசு..!

உலகளவில் பொருளாதாரத்தின் மீது தனது தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்காது என்பது தற்போது அரசுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்துவிட்டது.

அதையடுத்து,  கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால்  தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் முடங்கி உள்ளதால், மக்களுக்கு வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது.

இதனால் மாத செலவில் பெரும் பங்கு வகிக்கும், கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன், போன்றவற்றில் தனிமனிதர்களும் , சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரும், அவற்றை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

இந்த இக்கட்டான சூழலில்,  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக்கடனை திரும்ப செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதித்துள்ள நிலையில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி அதிகார வட்டாரங்களில் பேசப்படுகிறது.

English Summary

Extra time to repay bank loan ..!

Latest Articles

KOLNews