KOLNews

ஊழல் புகார் பற்றி நேருக்கு நேர் விவாதம்..! - முதல்வரின் சவாலை நிபந்தனைகளுடன் ஏற்றார் ஸ்டாலின்.

முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தனது பரப்புரையில், ஊழல் புகார் கொடுத்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ?, என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்கு சவால் விடுத்திருந்த நிலையில், நிலையில் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு முன் சில விஷயங்களை முதல்வர் செய்தாக வேண்டும் என்கிற நிபந்தனைகளையும் குறிப்பிட்டு அறிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

முன்னதாக இதுகுறித்து வியாழன் அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்கிறேன். அதற்கு முன்னர் முதல்வர் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் உடனே ஒரு மனுவை தாக்கல் செய்து, தன்னுடைய சம்பந்திக்கு ஒப்பந்தம் அளித்த நெடுஞ்சாலை துறை மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்க கோரவேண்டும். அதிமுக அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக உங்கள் ( எடப்பாடி பழனிசாமி) மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கு அனுமதி தருகிறேன் என நீங்கள் அனுமதி அளித்து விசாரணைக்கு உத்தர வீடுங்கள் என்று தமிழக ஆளுநருக்கு உடனே கடிதம் எழுத வேண்டும்.

 இதையெல்லாம் செய்து முடித்த அடுத்த நிமிஷமே, விவாதத்துக்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள், முடிந்தால் ஓ பன்னீர்செல்வம் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம் நான் தயார் நீங்கள் தயாரா ? 

என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்..

English Summary

Face to face discussion about corruption complaint ..! - Stalin accepted the chief's challenge with conditions.

Latest Articles

KOLNews