KOLNews

பொய் பிரச்சாரமாம் ..! - 'ஆம் ஆத்மீ' வெற்றி குறித்து இல.கணேசன் 'புகைச்சல்' கருத்து

டெல்லியில், சாமானிய மக்களின் மனதை வென்று 3வது முறையாக ஆம் ஆத்மீ கட்சி ஆட்சியை பிடித்திருப்பது, இன்று இந்தியாவின் பிற பகுதியினர் அனைவரையும் டெல்லி குறித்து பேச வைத்துள்ளது.

இருப்பினும், தலைநகரிலேயே தாங்கள் தோல்வியுற்றது பாஜகவினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளுக்காக, வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகிய நிலையில்,  தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், 'நாங்கள் கடந்த முறை பெற்றதை விட இந்த முறை அதிக இடங்களிலும், அதிக வாக்கு சதவீதமும் பெற்றுள்ளோம்' என கருத்து தெரிவித்துள்ளார்..

அத்துடன், 'இலவசங்கள், பொய் பிரசாரம் மூலம் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளனர்' என்றும்  தெரிவித்தார்.

English Summary

False propaganda ..! - 'L.Ganesan' comments on 'Aam Aadmi' victory

Latest Articles

KOLNews