இன்று,பிரதமர் நரேந்திர மோடி, தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் காணொலி கலந்து கொண்ட உரையாற்றுகையில் தெரிவித்ததாவது -
புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. முன்பு குடும்பங்களில், அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் , கெட்டுப்போய்விடக்கூடும் எனும் நினைப்பு இருந்தது. ஆனால் இன்று, நாட்டு மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்கின்றனர், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் வழங்கி உள்ளோம். பிற துறையை போலவே அரசியல், இளைஞர்களுக்கும் தேவை. நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் ஒரு வாய்ப்பாக உள்ளது. நாட்டிற்கு சவாலாக இருக்கும் வாரிசு அரசியல் என்பது, ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ளது. அதனை முழுவதுமாய் அகற்ற வேண்டும்
வாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் முக்கியமானதாக எப்போதுமே இருந்தது இல்லை. ஆனால், தற்போதும் கூட வாரிசு அரசியல் என்ற நோய் முற்றிலும் அழியவில்லை. வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு, அவர்களின் குடும்பமே முக்கியம். தங்கள் குடும்ப பெயரின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திறமைக்கும், நேர்மைக்கும் தற்போது மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
நாம் சந்திக்க உள்ள அடுத்த 25-26 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இது உங்கள் வாழ்க்கையின் பொற்காலம், நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்
English Summary
Family is important to them..not the country ..! - Prime Minister Modi criticizes successor politics ..!