'டெல்லி சலோ' என கிளம்பிய விவசாயிகளின் பேரணி, மிகப்பெரும் போராட்டமாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாக தீவிரம் அடைந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லியில் குவிந்துள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் என பாராமல்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டெல்லியை நோக்கி வந்து வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி காஸிப்பூர் எல்லையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலிகளை டிராக்டர் மூலம் இடித்து தள்ளி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினர்.
English Summary
Farmers' struggle to strengthen ..! - Amit Shah urgent consultation with fellow ministers ..!