KOLNews

பியர் கிரில்சுடன் 'பீயர்லெஸ்' மோடி..! - மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் கெத்து காட்டும் பிரதமர்..!

டிஸ்கவரியில் சேனலில் ஒளிபரப்பப்படும் மேன் வெர்ஸஸ் வைல்ட் பிரபலமான ஒரு நிகழ்ச்சி.. இதனை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். இயற்கையை பாதுகாப்பது, சூழலியல் மாற்றங்கள், வனப்பகுதிகளில், மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் இருப்பதைக் கொண்டு நாம் எவ்வாறு உயிர் வாழ வேண்டும் என்பதாய் களமாக கொண்டதே  இந்த நிகழ்ச்சி.

தற்போது , பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஜிம் கார்பட் தேசியப் பூங்காவில் இப்படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நாட்டின் 12 மொழிகளுடன் 180 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

இது பற்றி  பிரதமர் மோடி கூறுகையில்,

எனது வாழ்வில் பல ஆண்டுகளாக மலை, காடு போன்ற இடங்களில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்துள்ளேன். எனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த அனுபவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பொது வாழ்வுக்கு அப்பாற்பட்டு இயற்கையுடன் இணைந்து மிக சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. 

ஆகவே இதில் முழு அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டேன்.

 இந்த நிகழ்ச்சி, நமது நாட்டின் வளமிக்க இயற்கையை பறைசாற்ற எனக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்தது. வனப்பகுதிகளில் மீண்டும் நேரம் செலவிட்டது சிறந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பியர் க்றில்ஸ் உற்சாகமானவராகவும், இயற்கையை நேசிப்பவராகவும் உள்ளார் என்று தெரிவித்தார்.

Image result for 'Fearless' Modi with Bear Grylls ..! - Man vs Wild Showபியர் கிரில்ஸ், பிரதமர் மோடி குறித்து கூறுகையில்,

நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே இயற்கை உணர்த்துகிறது. உலகின் தலைசிறந்த தலைவருடன் நேரம் செலவிட்டது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி குறித்து அதிகம்  தெரிந்துகொண்டேன் என்றார்.

English Summary

'Fearless' Modi with Bear Grylls ..! - Man vs Wild Show

Latest Articles

KOLNews