KOLNews

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள்..! - ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வைகோ..!

அண்மையில் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நிலையில் அங்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் நோக்கில் முக்கிய அரசியல் தலைவர்கள் வீடு சிறையில் வைக்கப்பட்டார்கள். அவர்களோடு வெளியில் இருபவர்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை தான் உள்ளது. அப்படிப்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர்  காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா.

இந்நிலையில்,தற்போது  காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் வைகோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Image result for vaiko with farooq abdullah

மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினரும் , ஃபரூக் அப்துல்லாவின் நெருங்கிய நண்பருமான வைகோ சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 2019 செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை அவருக்கு தருவதற்கு அவர் எங்கிருக்கிறார் என தெரிந்தாக வேண்டும், ஆகவே அவர் கண்டுபிடித்து தருமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களின் நிலை என்ன என தெரியாத இந்த நிலையில் வைகோ தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என மதிமுக வினால் எதிர்பார்க்கப்படுகிறது.

 

English Summary

Find Farooq Abdullah ..! - Vaiko filed a complaint

Latest Articles

KOLNews