KOLNews

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! - காரணத்துடன் "நோ" சொன்ன இந்தியா

பாங்காக்,சென்ற  2012–ம் ஆண்டு,  ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் ‘பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை’ உருவாக்க இந்த நாடுகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

இந்நிலையில், நேற்று இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட கூட்டமைப்பில் உள்ள  நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.  தாய்லாந்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த ஆசியான் தொடர்பான நிகழ்வுகளுக்கு இடையேயும், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.

இதுதொடர்பான 3-வது மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, ஆர்சிஇபி ஒப்பந்தத்துக்கு பிறகு, இந்தியச் சந்தையில் சீன வேளாண் மற்றும் தொழில்துறை பொருள்கள் குவியக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்ததையடுத்து , உள்நாட்டு சந்தையை பாதுகாப்பது உள்பட பல்வேறு பிரச்னைகளில் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது.

மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பேசுகையில், "ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் நியாயமான பலனைப் பெற வேண்டும்; அனைத்து நாடுகளின் நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும்" என்றார்.

ஆனால்,  இந்தியா சுட்டிக் காட்டிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இது விஷயத்தில் இந்தியா தவிர இதர நாடுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், இந்தியா , ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இணையாது என்பதில் தெளிவாக உள்ளது.

English Summary

Free Trade Agreement ..! - India that said "No" with reason

Latest Articles

KOLNews