KOLNews

மேம்பாட் டு நிதி..எம்.எல் ஏ வுக்கா..தொகுதிக்கா..? - தொடர் சர்ச்சையில் அதிமுக எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக, திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தகரத்தால் ஆனது அந்த நிழற்குடை.  அதன் செலவு 45 லட்சம் என்பது நம்பக்கூடியதாக இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, உள்ள  பயணியர் பேருந்து நிறுத்ததிற்கு,தகரஷீட்டை கொண்டு அமைக்‍கப்பட்டுள்ள இந்த பயணியர் நிழற்குடைக்‍கு 45 லட்சம் ரூபாய் செலவு என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர்த் தொட்டி அமைக்க 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக குணசேகரன் கூறியிருந்த நிலையில், தற்போது தகர ஷீட் பயணியர் நிழற்குடைக்‍கு 45 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக​தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

Fund for Improvement.. for MLA or Constituency..? - AIADMK MLA in a series of controversies

Latest Articles

KOLNews