பொதுவாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா முடிந்து ஜனவரி 29-ம் தேதி முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பின் போது, காந்தியின் விருப்ப பாடலான Abide with me என்ற பாடல் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இப்பாடல் இசைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் தனது, எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், அந்த பாடல் குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை இட்டுள்ளார். அதில்,
கிருஸ்தவரால் எழுதப்பட்ட பாடல்.
திருவாசகத்தைப் போன்று மனதை உருக்கும் பாடல்.
எல்லா மதத்தினருக்கும் ஏற்புடைய பாடல்.
அண்ணல் காந்தியாருக்கு மிகப்பிடித்தப் பாடல்.
சூழும் இருளின் அச்சம் போக்கும் ஒளியே இறைவன்.
ஒளியை நீக்கி அச்சம் பரப்பும் இருளே சாத்தான்.
என தெரிவித்துள்ளார் சு. வெங்கடேசன்'
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் , Abide with me என்ற பாடல் நாட்டின் சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களுக்கு தொடர்புடைய பாடல் அல்ல என்ற காரணத்தால் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நம் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில், நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இடம் பெறுவதே பொருத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
English Summary
Gandhi's favorite song deleted ..! - Madurai MP Venkatesan's 'tweet' ..!