KOLNews

"கோ பேக் பேடி" ..! - துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நடக்கும் அதிகார போர் தொடர்ந்து வருகிறது. ஆளும் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடுவதுடன், எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் வேகத்துடன் செயல்படுத்த முடியாதவகையில் ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடு இருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், "கோ பேக் பேடி" என்கிற கோஷயத்தை முன்னெடுத்துள்ளது புதுச்சேரி காங்கிரஸ் கட்சி. 

அந்த வகையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் தடையாக இருப்பதாகவும் அரசின் மக்கள் நலத் திட்டங்களை தாமதமாகவே செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி அதன் அருகில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் போராட்டத்தில் உரையாற்றிய பல்வேறு தலைவர்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்

English Summary

"Go Back Bedi" ..! - Congress protests against Deputy Governor Kiran Bedi ..!

Latest Articles

KOLNews