KOLNews

"மக்களிடம் எளிமையாக பழகுங்கள்” - கட்சினரை வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி..!

நேற்று, அ.தி.மு.கவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். 

அத்துடன், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் போது கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்குகள் பெறுவதில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த விஷயங்களும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டன.

  கூட்டத்தின் நிறைவில் பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “என்னதான் முதல்-அமைச்சர் என்றாலும், நான் என்றுமே ஒரு விவசாயி போலவே இருக்கிறேன். மக்களோடு மக்களாக எளிமையாகவே பழகுகிறேன். எங்காவது வெளியே செல்கையில் பொதுமக்களை கண்டால் உடனடியாக காரை நிறுத்தி அவர்களுடன் பேசுகிறேன், டீக்கடையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டீ குடித்து பேசி மகிழ்ந்து இளைப்பாறுகிறேன்.

அதுபோல நீங்களும் கட்சி பொறுப்புகளை மறந்து மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள். அதுதான் முக்கியம்” என்று கூறியதாக தெரிகிறது 

English Summary

"Go easy with People" - Edappadi Palanisamy who urged the party ..!

Latest Articles

KOLNews