KOLNews

கல்யாணராமன் மீதான குண்டர்சட்டம் ரத்து..!

சென்னையை சேர்ந்த தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன், , கடந்த ஜனவரி 31ஆம் தேதியில் பாஜக சார்பில் கோவையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரியவகையில் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவர் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதையடுத்து கல்யாணராமனின் மனைவி சாந்தி , தனது கணவர் மீதான குண்டர் தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகவே அதனை  ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன், கல்யாணராமன் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை றது செய்து உத்தரவிட்டனர்.

English Summary

Goondas act on Kalyanaraman repealed ..!

Latest Articles

KOLNews