KOLNews

காந்திக்கு இப்படி ஒரு கொள்ளுப் பேரன் இருப்பது தெரியாம போச்சே..!

பழைய கந்தையாக இருந்த இந்தியாவிற்கு மோடி தந்தையாக இருந்து அனைத்தையும் சீராக்கினார் என  அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய நிலையில் அதற்கு எதிர்வினை காந்தியின் கொள்ளு பேரன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

முன்னதாக செப்டம்பர் 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் பேசிய இந்த பேச்சுக்கு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், 'இந்தியாவின் தேசத் தந்தையின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவரை வரவேற்கிறேன். அமெரிக்காவின் தந்தை என்று அறியப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவேளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பலாம்'  என தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இதற்கு முன்பு இந்தியா பழைய கந்தை போல இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஏராளமான வேறுபாடுகள், மோதல்கள் இருந்தன. ஆனால், மோடி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விட்டார். ஒரு தந்தையைப் போல. அவர் தான் இந்தியாவின் தந்தை",  என்று குறிப்பிட்டார்.

Image result for modi and trump

அதையடுத்து மோடி ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை  ஏகமாய் புகழ்ந்து தள்ளிய நிலையில்  துஷார் காந்தியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image result for thushar gandhi

காந்தியின் மகன் மணிலால் காந்தி, மணிலால் காந்தியின் மகன் அருண் காந்தி, அருண் காந்தியின்மகன் துஷார் காந்தி,  ஆதலால் 59 வயதாகும் துஷார் காந்தி மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,மகாத்மா காந்தி அறக்கட்டளையின் அறங்காவலரான துஷார் காந்தியிடம்,  மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தைக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து கேட்கையில் , 'அது வெறும் அடையாளத்துக்காக செய்யப்படும் நிகழ்வு மட்டுமே',  என்று கூறினார்  

English Summary

Had no idea... Gandhi had such a great grandson ..!

Latest Articles

KOLNews