KOLNews

கழிப்பறைகளை கட்டினார்...ஆனால் அங்கு தண்ணீர் இல்லை..! - மோடியை கலாய்க்கும் சசிதரூர்..!

பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் அரைகுறையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கூறியுள்ளார்.

முன்னதாக,அவர் எழுதிய நூல் ஒன்றை வெளியிட்டு  சசி தரூர் பேசுகையில், 

"காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டது சரியான ஒன்று. அவர் இதற்கு முன்பு கட்சித் தலைவராக இருந்ததுடன், பல்வேறு சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில்  திறம்பட செயல்பட்டவர். 

தற்போது  காங்கிரஸ் செயற்குழுத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகும். உள்கட்சித் தேர்தலால் கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி விரைவில் உள்கட்சித் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி கூடியுள்ளது", என்றார் .

Image result for modi swachh bharat toiletதொடர்ந்து பேசிய சசி தரூர், பிரதமர் குறித்து குறிப்பிடுகையில்,

"பிரதமர் மோடி நல்லது செய்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். உண்மைதான். கழிப்பறைகளை கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அதில் 60 சதவீத கழிப்பறைகள் தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பெண்களுக்கு இலவச எரியாவு இணைப்பை வழங்கினார் மோடி. ஆனால், அவர்களில் 92 சதவீதம் பேர், அடுத்தடுத்த எரிவாயு சிலிண்டரை வாங்க இயலாமல் உள்ளனர். காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் தவிர்த்தவர்கள் மீது கட்சி கவனம் செலுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நாம் விமர்சிக்கும்போது உண்மைத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்", 

என கூறினார்.

English Summary

He built toilets ... but there was no water ..! - Sasi Tharoor criticise Modi ..!

Latest Articles

KOLNews