KOLNews

அவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை..! - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்

தமிழக அரசியல் களத்திற்கு நடிகர் ரஜினிகாந்த வருவார் என தான் நம்பியதோடு, ரஜினி ரசிகர்களுக்கும் அந்த நம்பிக்கையை ஊட்டியர், காந்திய மக்கள் இயக்க தலைவரான தமிழருவி மணியன். 

சிறந்த பேச்சாற்றல், தமிழறிவு , பொது வாழ்க்கையிழும்,தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையாளராக, ஒழுக்க சீலராக அறியப்பட்ட தமிழருவி மணியன், ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பியதால், அவரை போலவே ரஜினி அரசியலுக்கு வருவார் என திராவிட சித்தாந்த எதிர்ப்பாளர்கள் பலரும் நம்பினர். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது தள்ளி போக போக ரஜினி விமர்சனத்துக்கு உள்ளாவதை போல தமிழருவி மணியனும் விமர்சனத்துக்கு உள்ளானதுடன், மீம்ஸுகள் மூலம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார். ஆனாலும், ரஜினி வெளிப்படையாக உள்ளதாக இன்னும் தமிழருவி மணியன் முழுமையாக நம்பி வருகிறார்.  

இந்நிலையில், இன்று ரஜினியை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த தமிழருவி மணியன், அது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு மக்களிடம் எதையும் மறைத்து வாழவேண்டிய அவசியம் ரஜினிக்கு எள்ளளவும் இல்லை என்றும், அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தற்போது அவர் உடல் நிலை குறித்தும் வெளிப்படையாகவே அவர் பேசுகிறார் என்றார். அத்துடன் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருக்கே தெரியும் என்றும், அவரிடம் பேசியது குறித்து முழுமையாக ஏதும் கூறமுடியாது என தெரிவித்த தமிழருவி மணியன், ரஜினியிடம், அவரின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் முடிவெடுக்கும்படி தெரிவித்தாக கூறினார். 

English Summary

He did not hide anything from the people ..! - Tamil aruvi Maniyan who met Rajini

Latest Articles

KOLNews