KOLNews

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் ! - கடுங்கோபத்தில் கமல்..!

மருத்துவ படிப்பிற்கான 'நீட் தேர்வு'  அச்சம் காரணமாக  தற்கொலை செய்துகொண்ட  மாணவர்கள் தனுஷ் , கனிமொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் கருத்தினை தெரிவித்துள்ளார் .

அண்மையில் தனுஷ் என்கிற மாணவன்  'நீட் தேர்வு'  அச்சம் காரணமாக  தற்கொலை செய்துகொண்ட துயரம் நீங்காத நிலையில், தற்போது  விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி ஜெயலட்சுமி ஆகியோரின் இளைய மகள் கனிமொழி , நீட் தேர்வினால் ஏற்பட்ட  மன உளைச்சலில் திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . 

இப்படி நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை சம்பவங்கள் தொடரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ் , கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள் . இது ஒரு நாடு , இது ஒரு தேர்வு , இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் ! என்று பதிவிட்டுள்ளார்.

English Summary

Heart is Boiling to say ! - Kamal in anger ..!

Latest Articles

KOLNews