KOLNews

ஹலோ ..அதிமுக..! - நீங்க தான் எதிர்க்கட்சி..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி, அதிமுகவை ஒட்டு மொத்த அரசியலில் தோல்வி அடைந்த கட்சியாக மாற்றிவிடவில்லை. இன்னும் தலைமைக்கான போட்டிக்கு பலரை இழுக்கும் வசீகரத்துடனேயே இருக்கிறது. 

இரட்டை தலைமையாக இருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே உள்ள உரசல் போக்கில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா ? என சசிகலா நினைக்க, காலம் கனியும் வரை காத்திருக்கலாம், ஆனால் ஒதுங்கி விட முடியாது என்கிற உத்வேகத்துடன் ஓபிஎஸ் இருக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தித்த 2006 தேர்தல் தோல்வியுடன் ஒப்பிடக்கூடிய அளவில் தான் தேர்தல் தோல்வி இருப்பதால், புரட்சி தலைவி போல், "நானும் எடுப்பேன் விஸ்வரூபம்" என காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அரசிலுக்கு ஏதுடா லாக்-டவுன் ..? என 'ஒர்க் ப்ரம் ஹோம்' பாணியில், கவரேஜ்  இல்லாத நெட்ஒர்க்கின் சிம் கார்டை விற்க முயற்சிப்பவர் போல், தனது டெலி மார்கெட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் சசிகலா. 

இரு அணிகளுக்கிடையே பெரும் மோதல் வந்து தான்,  ஒற்றை தலைமை உருவாகும் என பலரும் ஆருடம் கூறுகையில், சண்டைக்கு வந்து தொலைக்காமல்,சமரசமாகவும் போகாமல் இபிஎஸ்க்கு இடைஞ்சலாய் எவ்வளவு காலம் நிற்பார் ஓபிஎஸ்.?

எதிர்க்கட்சி வேலையையாவது ஒழுங்கா செய்கிறார்களா..?  மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இருப்பிடம், ஆனால் சாமானியன் தனக்கென ஒரு வீட்டை கட்ட முடியாத அளவில் கட்டுமான பொருட்களின் விலை ஏறியுள்ளது. மாக்களை பாதிக்கும் இந்த பிரச்னையை பெரிதாக முன்னெடுக்காமல், அறிக்கையுடன் முடித்து கோள்வதா..? கிடைத்த பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டாமா.? 

பதவிக்கு வந்த நாளில் இருந்து..'இப்ப திமுக திருந்திருச்சு போல..!' என அதிமுக அனுதாபியும் நினைக்கும் அளவிற்கு திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் காட்டும் பெர்பார்மன்சை காலி பண்ணுங்க என தொண்டன் கதற, சாவுகாசமாய் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை  கூட்ட இருக்கிறது அதிமுக. 

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க..ஜனநாயகம் காக்க  எதிர்க்கட்சியும் செயல்படுன்னுமுள்ள ..!

English Summary

Hello .. ADMK ..! - You are the opposition ..!

Latest Articles

KOLNews