KOLNews

இதோ வர்றேன்..! - ஸ்லீவை சுருட்டும் ரஜினி...மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரை ரசிகர்களை மகிழ்வித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலுக்கு இதோ வருகிறார், அதோ வருகிறார் என ஆருடங்கள் சொல்ல வைத்து 20 வருடங்களுக்கு மேல் கழித்துவிட்டார். அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ அரசியல் அவரை நோக்கி வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 

இந்நிலையில், 'நான் அரசியயலுக்கு வருவது உறுதி' என கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் தன் ரசிகர்களுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றும் வகையில், அவர் வரும் தமிழ் புத்தாண்டில் தனது அரசியல் கட்சியை துவங்குவார் என தெரிகிறது.  

அதன் ஒரு கட்டமாக , சென்னையில் வரும் வியாழனன்று தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, கோடம்பாக்கத்தில் உள்ள, தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பை, வியாழன் காலை 10 மணியளவில் நிகழ்த்த இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது போல் ஏற்கனவே இரண்டு முறை இத்தகைய சந்திப்புகள் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது நடக்கவுள்ள மூன்றாவது சந்திப்பில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் ரசிகர்கள் குஷியாகவும், பிற அரசியல் கட்சிகள் தங்கள் தாடையை தடவியபடி உற்று நோக்கியும் வருகின்றன. 

English Summary

Here I am ..! - Rajini to roll up the sleeve ...

Latest Articles

KOLNews