KOLNews

வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. - பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அது குறித்து தனது  ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் பிரதமர் பதிவிடுகிறார்.

 ‘முதல் 6 மாதங்களில் இந்தியா’ என்ற தலைப்பில்  வெளியிட்டுள்ள அந்த பதிவில் ,அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 6 மாத காலங்களில் மேம்பட்ட வளர்ச்சிக்காகவும், சமூக அதிகாரம் பகிர்தலை துரிதப்படுத்தவும், இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். 370-வது சட்டப்பிரிவுக்கு முற்றுப்புள்ளி முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றம் முதல் தீர்மானமான வெளிநாட்டு கொள்கை வரை வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரவிருக்கும் காலங்களில் மேலும் அதிகமானவைகளை செய்ய ஆவலுடன் இருக்கிறோம். இதன்மூலம் நாங்கள் வளமான மற்றும் முன்னேறிய புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

‘அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை’ என்ற எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் ஆசியுடன் ‘வளர்ந்த இந்தியா, 130 கோடி இந்தியர்களின் மேம்பட்ட வாழ்க்கை’ ஆகியவற்றை முன்னெடுத்து புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும்.

என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

English Summary

Historical measures have been taken. - PM Modi is proud ..

Latest Articles

KOLNews