KOLNews

கட்சி நடத்துவது எவ்வளவு கஷ்டம்..? - பாஜக பெற்ற நன்கொடை சொல்லும் உண்மை..!

தேசியளவில் அதிகளவு நன்கொடை பெற்ற அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இது அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது

பாஜக , கடந்த 2019-20 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றது என்கிற இந்த தகவல் மூலம், பாஜக எதிரிக்கட்சிகளால் விமர்சிக்கப்படும் நிலையில், நாங்கள் தான் உண்மையை மறைக்காமல் கூறியிருக்கிறோம் என்பது இதிலிருந்து தெரிகிறது என பாஜக அனுதாபிகள் கூறுகிறார்கள்.

அவர்களின் கூற்றை முழுமையாக ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் கணக்கு உண்மை என எந்த அரசியல் விமர்சகரும் இன்று கூற தயாராக இல்லை என்பதே யதார்த்தம். 

பொதுவாக பல்வேறு தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும்  கட்சியை நடத்த சமூகத்தின் பல்வேறு தரப்பை சார்ந்தவர்களிடமிருந்தும் நன்கொடை பெறுவது வாடிக்கையே..!. இந்த நன்கொடைகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன .

அந்த வகையில் தான், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் அன்பளிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன . அதன்படி, பாஜக ஒரே ஆண்டில் ரூ .750 கோடியை தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளது . இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும் . இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ .139 கோடியையம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ 59 கோடியையும் , திரிணமூல் கட்சி ரூ .8 கோடியையும் , சிபிஐ ( எம் ) ரூ .19.6 கோடியையும் , சிபிஐ ரூ .19 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

How difficult is it to run a party ..? - The truth about the donation received by the BJP ..!

Latest Articles

KOLNews