போக்குவரத்து துறையில் நடந்த மெகா வசூல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், "வட்டார போக்குவரத்து அதிகாரியான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, எப்.சி.,எனும் தகுதிச் சான்று பெறச் செல்லும் வாகனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து தான் ஒளிரும் பட்டை, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ்., கருவி போன்றவை வாங்க வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்குள் சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து, அவற்றின் வாயிலாக, மெகா வசூல் செய்யும் மோசடி நடக்கிறது.
தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அங்கீகாரக் கடிதம் பெற்று, எப்.சி., புதுப்பிக்க வேண்டும் என்பதும் தொடருகிறது. அங்கீகாரம் கடிதம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவதை, உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு, ஏன் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது;இதுவரை, கமிஷன் வசூல் எவ்வளவு; மக்களின் பாதுகாப்புக்கு எதிரான விதிமுறைகளை வகுத்து கொடுத்தது யார் என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், போக்குவரத்து துறை முறைகேடு தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
How much is the commission collected? - Stalin's question