KOLNews

நான் அப்படி சொல்லவில்லை..! - உ.பி. முதல்வர் வேட்பாளர் குறித்து பிரியங்கா காந்தி விளக்கம்

புதுடெல்லி : உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு பிரவரி 10 - ம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவி பிரியங்கா காந்தி. 

இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது  , உத்திர பிரேதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா ? பிறகென்ன ? எனது முகத்தை நீங்கள் இங்கும் பார்க்கலாம் " என தெரிவித்திருந்தார். இதையடுத்து தன்னை தான் உ.பி. முதல்வர் வேட்பாளர் என்று பிரியங்கா சூசகமாக தெரிவித்தாக செய்தி வெளியாகியது . 

இந்நிலையில் இதனை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, நான் மட்டுமே உத்தரபிரதேச காங்கிரஸின் முகம் என்று கூறவில்லை . செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுட்பியதால் சற்று மீகைப்படுத்தி கூறினேன் . அவ்வாறு எந்த முடிவும் கட்சியால் எடுக்கட்டட வில்லை " என்றார் . அத்துடன்  "உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு கதவு ஆடட்பட்டுள்ளது . ஆனால் மற்ற கட்சிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது . உ.பி.யில் டாழுகவும் சமாஜ்வாதியும் ஒரே மாதிரியான அரசியலை கடைப்பிடிக்கின்றன . ஏனென்றால் அந்த வகையான அரசியலால் அக்கட்சிகள் பலன் அடைகின்றன . மதவாதம் மற்றும் சாதியவாதம் அடிப்படையில் முன்னேறிச் செல்லும் கட்சிகளுக்கு ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது . அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி கொள்கிறார்கள்  " என்றார் . 

English Summary

I did not say that ..! - Priyanka Gandhi's explanation about the UP Chief Ministerial candidate

Latest Articles

KOLNews