KOLNews

ஆட்சியை பிடிக்கணும் என்றால் முதலில் வீட்டை பிடிக்கணும்..! - புதிய யோசனையில் பிரியங்கா

காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் அதன் தலைவர்கள் சிலர் வேறு கட்சிகளில் இணைந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உ.பி.யில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில், அங்கேயே தங்கி இருந்து கட்சிப் பணிகளை கவனிக்க, காங்., பொது செயலர் பிரியங்கா வீடு பார்க்க துவங்கி உள்ளாராம்.

உத்தர பிரதேச மாநிலத்தின் காங்., பொறுப்பாளராக, அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா பதவி வகித்து வருகிறார்.

முன்னதாக ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கூறல் கொடுத்து வரும் நிலையில், மத்திய அரசின் நிலைக்கு ஆதரவாக, உ.பி., ரேபரேலி தொகுதியை சேர்ந்த காங்., எம்.எல்.ஏ., அதிதி சிங், சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

Image result for priyanka gandhi

தவிர , உ.பி.யை ஆளும் பா.ஜ., அரசு, சமீபத்தில் நடத்திய, சிறப்பு சட்டசபை கூட்டத்தில், அதிதி பங்கேற்றார். இதனால், காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில் , காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த வேறு பல தலைவர்களும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான  பிரியங்கா, 'கட்சி விரோத போக்கில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்' என, எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், உ.பி.,யில், 2022ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்குள், கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய நபர்களை, கட்சி பொறுப்புகளில் நியமிக்க, பிரியங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் , உ.பி.,யிலேயே தான் தங்கி இருந்து, கட்சிப் பணிகளை கவனிதாலே இதனை சீராக்க முடியும் என அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக, பிரியங்காவுக்கு லக்னோவில், வீடு பார்க்கும் பணி நடந்து வருகிறது.

தனது பாட்டி இந்திராவின் தாயார் வழி உறவினர், ஷீலா கவுல் என்பவரது பங்களா லக்னோவில் உள்ளதால் ஒருவேளை பிரியங்கா அங்கு குடியேற வாய்ப்பு உள்ளது என கிசுகிசுக்கப்படுகிறது.

English Summary

If you like the rule, first take the house ..! - Priyanka on new idea

Latest Articles

KOLNews